..இது எங்கள் ஊர்.இதற்குப் பெயரில்லை.கிராமம் என்றுதான் அழைப்போம்.’நீராலைக் கிராமம்’ என மற்றவர் அழைப்பதுண்டு.
இங்கு மின்சாரம் கிடையாது.தேவையுமில்லை.மெழுகுவத்தியும்,தாவர எண்ணெயும் போதும்.நல்லது கெட்டது எம் மக்களுக்குத் தெரியும்.
இரவுகள் அடர் இருட்டாய் இருக்கும்.அப்படித்தானே இருக்க வேண்டும்.பகலில் ஏது நட்சத்திரங்கள்..?
நெல்வயல் உண்டு. உழுவதற்கு எருதும்,குதிரையும்தான்.எந்திரக் கலப்பை இல்லை.விழுந்த மரங்களை விறகுக்காய்ச் சேமிப்போம்.சில மரங்களை வெட்டுவதுண்டு.கல்கரிக்கு அவை பயனாகும்.காடுகளை எரிப்பதில்லை.மாட்டுச்சாணம் எமக்குத் தெரிந்த நல்ல எரிபொருள்.மனிதர் வாழ அடிப்படையான பொருள் போதும். இது இயற்கையை மீறாத வாழ்க்கை.மற்றவர் மறந்த வாழ்க்கையும் கூட.
இயற்கையின் அங்கம்தான் மனிதர்.ஆனால்,அதை அழிக்கவே முற்படுகின்றனர் அவ்ர்கள்.சார்ந்து வாழ எண்ணமில்லை இன்னும் சிறந்ததைப் படைக்க முயல்கின்றனர் - குறிப்பாக விஞ்ஞானிகள்.இயற்கையின் இதயம் தெரியாது அவர்களுக்கு.மகிழ்ச்சியைத் தர முடியாததை உருவாக்குவது எதற்கு..? ஏனிந்தப் பொய்ப்பெருமிதம்..?
மனிதர் பலரும் இப்படித்தான்.கண்டுபிடிப்புகளை அதிசயமாய்க் காண்கிறார்கள்.உருவாக்கியவனை வணங்கவும் செய்கிறார்கள்.ஆனால், அவர்களுக்குத் தெரியாது - இயற்கை அழிந்தால் தாமும் அழிந்துவிடுவோம் என்பது.
சுத்தமான காற்றும்,நீரும்,மரங்களும் இவைகளை உருவாக்கித் தரும் மலையுச்சிப் புற்களும்தான் முக்கியமானவை.
எல்லாம் மாசடைந்து விட்டன.அழுக்கான காற்று,அசுத்த நீர்.மனித இதயம் வரை இந்தச் சீர்கேடு.
.
கோவில்களும் சாமியார்களும் கிடையாது இங்கு.வயதாகி இறப்பவர்களைக் கொண்டாட்டத்துடன் புதைப்போம். இளவயது மரணம் தாங்காது எங்களுக்கு.
எனக்கு இப்போது வயது 103. இறப்பிற்குரிய வயதுதான்.ஆனால் வாழ்வது இனியது.உணர்வுமயமானதுகூட..! .
காணுங்கள்:
http://vimeo.com/31359086